பெண் குழந்தைகள் ஞாயிறு. Sunday For the Girl Child. அருட்பணியும் பெண் குழந்தை களின் எதிர்காலமும்.(305) Her Voice Her future. எண்ணிக்கை 27: 1-11, திருத்தூதர் பணிகள் 16: 13-15, திருப்பாடல்கள்:8, மாற்கு 5:21-43.

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வாரம், பெண் குழந்தைகள் ஞாயிறு  தினத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அருட் பணியும் பெண் குழந்தைக ளின் எதிர்காலமும்" என்பதா
கும். அருட்பணி என்பது திருச் சபை அமைப்புகளில் பெண்கள் செய்யும் நற்செய்தி பரப்புதல், பெண்கள் ஐக்கிய பணிகள், தொண்டுப் பணிகள், விவிலி யம்  போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தல் மற்றும் சமூக சேவைப் பணிகள் அடங்கும்.
தாவீதின் பார்வையில் பெண் குழந்தைகள்:
அன்பர்களே! தாவீது அரசர்
 "கோலியாத்துக்கு எதிராகத் தாவீது பாடிய திருப்பாடல்"  தாவீது , இளமையில் கோலி யாத்தை வீழ்த்த உதவிய அதே இறைவன், அரசனான பிறகும் பெரிய எதிரிகளைவெல்லத் துணை நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைப் பாடினா ர்."எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும் செடிகள்போல் இருப்பார்களாக! எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும் செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக!" (திருப்பாடல் கள்(சங்கீதங்கள்) 144:12)
இங்கு 'அரண்மனை' என்பது ஒரு குடும்பத்தையும், சமுதாய த்தையும், கடவுளின் இல்லத்தை யும் குறிக்கிறது. ஒரு நாட்டின் அல்லது குடும்பத்தின் வலிமை அதன் பெண்களின் பண்புக ளிலேயே உள்ளது என்பதை இது காட்டுகிறது.
பண்டைய கட்டிடக்கலையில், மூலைக்கற்கள் என்பது ஒரு கட்டிடத்தின் நான்கு மூலைக ளையும் இணைத்து, முழுக் கட்டி டத்தையும் தாங்கிப் பிடிக்கும் மிக முக்கியமான ஆதாரமாகும். அதுபோல, பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, இரண்டு குடும்பங்களை இணைக்கும் பாலமாகவும், குடும்பத்தைத் தாங்கிப் பிடிக் கும் தூண்களாகவும் விளங்க வேண்டும் என்பதே இதன் பொருள்.ஒரு சாதாரணக் கல் அரண்மனைக்கு அழகு சேர்க் காது. அதைச் சிற்பி உளியால் செதுக்கி, மெருகேற்றும் போது தான் அது அரண்மனையின் அழகைக் கூட்டும். இது பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நல்ல ஒழுக்கம், கல்வி, ஆன்மீகப் பயிற்சி மற்றும் நற்பண்புகளைக் குறிக்கிறது. பெற்றோரின் சரியான வளர்ப் பால் செதுக்கப்படும் பெண் குழந்தைகள், சமுதாயத்திற்குப் பெருமை சேர்ப்பார்கள்.
பொதுவாக, மென்மை மற்றும் அழகு என்பது பெண்களின் அடையாளமாகப் பார்க்கப்படும். ஆனால் இந்த வசனம், பெண் கள் வெறும் அழகுப் பொருளாக மட்டுமல்லாமல், ஒரு அரண்ம னையைத் ( தங்கள் இல்லத்தை) தாங்கும் கல் போல வலிமையா 'னவர்களாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறது.
சென்னை பேராய பெண்குழ ந்தைகள் நலப்பணி (Girl Child Ministry of the Diocese of Madras) அன்பர்களே! தென்னிந்தியத் திருச்சபையின் (CSI) சென்னை பேராயத்தின் (CSI Diocese of Madras) கீழ் செயல்படும் ஒரு
முக்கிய சமூக  நலப்பணியாகும்.
பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
ஏழை மற்றும் பின்தங்கிய குடும் பங்களைச் சேர்ந்த பெண்குழந் தைகளின் பள்ளி மற்றும் கல்லூ ரிப் படிப்பிற்கு நிதியுதவி வழங் கப்படுகிறது. மேலும், சென்னை பேராயத்தின் கல்வி நிறுவனங் கள் மூலமாக மாற்றுத்திறனாளி மாணவிகள் உட்பட அனைத்துப்
பெண்குழந்தைகளுக்கும் தரமா ன கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைத் திருமணம் மற்றும் பாலினப் பாகுபாடுகளைத் தடுக்கத் திருச்சபை அளவிலும் சமூக அளவிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின் றன.  ஞாயிறு பள்ளிகள் (Sunday Schools), விடுமுறை வேதாகமப் பள்ளிகள் (VBS) மற்றும் பேராய அளவிலான குழந்தைகள் பேர ணிகள் (Children's Rally) மூலமா கப் பெண்குழந்தைகளின் ஆன்மீக மற்றும் தலைமைத்துவ ப் பண்புகள் வளர்க்கப்படுகி ன்றன.
1.உலகின் பெண்களுக்கான முதல் சொத்துரிமைசட்டம்.'The world's first property rights law for women." எண்ணிக்கை: 27:1-11 
அன்பர்களே! இஸ்ரவேலர்கள் இன்னும் கானான் தேசத்திற் குள் நுழையவும் இல்லை, எதிரிகளை வெல்லவும் இல்லை. ஆனாலும், கடவுள் வாக்களித்த நாடு நிச்சயம் கிடைக்கும் என்ற முழு நிச்சயத்தோடு, இப்போதே அந்த நிலத்தைப்பெற்றுக்கொள் வதுபோலபெண்கள்சொத்துரிமை கேட்டதை இறையியலாளர்  கால்வின் பாராட்டுகிறார்.
மனாசே கோத்திரத்தைச் சேர்ந் த செல்லோப்பியாத் ஒரு இஸ்ர வேலர் ஆவார். ஆண் வாரிசுகள் இல்லாமல் அவர் இறந்த பிறகு, அவருடைய ஐந்து மகள்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் மோசேயிடம் முறையிட்டுப் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தைப் பெற்றுத் தந்த நிகழ்வால் இவர் வேதாகம வரலாற்றில் முக்கி யத்துவம் பெறுகிறார். எகிப்திலிருந்து விடுதலையாகி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை நோக்கி இஸ்ரவேலர்கள்பயணித்தபோதுவனாந்தரத்தில் செலோப்பியாத் இறந்துவிட்டார். இவர் கோரா கின் கலகத்தில் ஈடுபடாமல், தனது சொந்தப் பாவத்தினாலே யே மரித்தார் என்று திருவிவலி யம் கூறுகிறது.
யார் இந்த கோராகு Korah?
Who was Korah?
இவர் லேவி கோத்திரத்தில் கோகாத் என்பவரின் வழித் தோன்றல் ஆவார். இவரது தந் தை பெயர் இஸ்யார்.கோராகு, மோசே மற்றும் ஆரோன் ஆகி யோருக்கு ஒன்றுவிட்ட சகோதரர் (Cousin) ஆவார்.லேவியராக இருந்ததால், ஆசரிப்புக் கூடா ரத்தில் (கடவுளின் கூடாரம்) பணிபுரியும் உயர்ந்த பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தில் பணி புரியும் பொறுப்பு இருந்த போதி லும், கோராகு ஆரோனுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான ஆசாரியப் பதவியையும் (High Priesthood) தலைமைத்துவத்தை யும் விரும்பினார். எனவே, ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்த தாத்தான், அபிராம் மற்றும் 250 தலைவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். இவர்களின் கலகத்திற்குத் தீர்ப்பளிக்கும் விதமாக, பூமி பிளந்து கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் உடைமை களையும் உயிரோடு விழுங்கி யது. மேலும், தூபம் காட்ட வந்த 250 தலைவர்களும் கடவுளிடமிரு ந்து வந்த நெருப்பினால் அழிக்க ப்பட்டனர்.
மிக முக்கியமாக இந்த கலககூட் டத்தில் செலோப்பியாத் கலந்து க்கொள்ளவில்லை.
அன்பர்களே! இந்த பெண்களின்
இந்தச் செயல், தங்கள் சுயநல த்திற்காகத் தோன்றினாலும், அதன் அடிப்படை கடவுளின் வாக்குறுதியின் மீதிருந்த விசு வாசமே. இது முழு இஸ்ரவேல் மக்களுக்கும் கடவுளின் வாக்கு த்தத்தத்தின் மீது நம்பிக்கையை ப்பலப்படுத்தியது. 
மோசே 40 ஆண்டுகளாக திருச் சட்டத்தை போதித்த பெரிய தலைவராக இருந்தபோதிலும், இந்தச் சிக்கலான வழக்கில் தன் சுயபுத்தியின்படி தீர்ப்பளிக் காமல், "கர்த்தருடைய சந்நி தியில் கொண்டுபோனார்".
இது தனக்குத் தெரியாததை ஒப்புக்கொண்டு கடவுளிடம் ஆலோசனை கேட்க மோசே வெட்கப்படவில்லை. இன்றைய ஆட்சியாளர்களும், நீதிபதிக ளும், திருச்சபை தலைவர்களும் சிக்கலான நேரங்களில் ஞானத் திற்காகக் கடவுளை நாட வேண் டும் என்பதை இது கற்பிக்கிறது என்கிறார் கால்வின்.
பொதுவாக யூதச் சட்டத்தில் வம்சாவழி ஆண்கள் வழியாக வே கணக்கிடப்பட்டாலும், ஒரு மனிதனுக்கு மகன்கள் இல்லா தபோது அவனுடைய சொந்த மகள்களைப் பாலினத்தின் அடிப்படையில் புறக்கணிப்பது "மிகவும் அநீதியானது" (very unjust) என்று கால்வின் சுட்டிக் காட்டுகிறார்.
நேரடி வாரிசுகளான மகள்களு க்கு முன்னுரிமை அளித்த கடவுள், ஒருவேளை மகள்களும் இல்லையென்றால் மட்டுமே சகோதரர்கள் அல்லது தந்தை யின் சகோதரர்கள் என ஆண் வாரிசுகளுக்குச் சொத்து செல்ல வேண்டும் என்று சட்டமிட்டார். இதன் மூலம் ஆபிரகாமின் சந்த தியும் பன்னிரண்டு கோத்திரங் களின் பெயரும் அழியாமல் பாதுகாக்கப்பட்டது.
இதன் மூலம் உலகின் பெண்க ளுக்கான முதல் சொத்துரிமை சட்டம் இயற்றப்பட்டது.இது பெண் குழந்தைகளின் எதிர் காலத்திற்கான நம்பிக்கையா கும். 
2 இறை செய்தியை கேட்பவ ர்கள் பெண்களே!Those who listen to the Word of God are women."திருத்தூதர் பணிகள் 16: 13-15
அன்பர்களே! ஆலயத்தில் இறை
செய்தியை ஆர்வமாக கேட்பவர் கள், வருகிறவர்கள்,துதிபாடல்
 பாடுகிறவர்கள், ஊழியங்களை தாங்குகின்றவர்கள்,இறைவேண்டல் செய்கிறவர்கள் ஆண் களை  காட்டிலும் பெண்களே. திருதூதர் பவுல் அடிகளாரும், திமோத்தேயும் மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றார்கள். விவிலிய வரலாற்றில் ஐரோப் பியக் கண்டத்தில் முதன் முதலா க நற்செய்தி அறிவிக்கப்பட்டு, கிறிஸ்தவத் திருச்சபை நிறுவப் பட்ட நகரம் என்ற பெருமையை பிலிப்பி  பெற்றுள்ளது. . கி.மு. 356-ஆம் ஆண்டில், மாவீரன் அலெக்சாந்தரின் தந்தையான மாசிதோனியாவின் இரண்டாம் பிலிப் (Philip II) மன்னர் இந்நகரைக் கைப்பற்றி, தமது பெயரால் 'பிலிப்பி' என்று பெயரிட்டார்.அது பிற் காலத்தில் உரோமையரின் குடியேற்ற நக ரம்.அந்நகரில் சிலநாள்கள் திருதூதர்கள் பவுலும், தீமோத் தேயும் தங்கியிருந்தார்கள். 
பிலிப்பி நகரத்திற்குள் பெரிய இறைவேண்டல் கூடமோ, புகழ்பெற்ற இடமோ இல்லாத தால், நகரத்திற்கு வெளியே ஆற்றங்கரையில் கூடியிருந்த பெண்களிடம் பவுல் நற்செய்தி யை அறிவித்தார். இறைவனின் அரசு ஆரவாரத்துடன் அல்லா மல், மிகச் சாதாரணமான சூழ லில் தொடங்குகிறது என்பதை இறையியலாளர் கால்வின் சுட்டிக்காட்டுகிறார்.. சில பெண் கள் மட்டுமே கூடியிருந்த இடத் திலும்கூட பவுல் தயங்காமல் அமர்ந்து போதித்தார். நற்செய்தியை அறிவிப்பவர்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை யையோ, சமூக அந்தஸ்தையோ பார்க்காமல் கிடைக்கும் ஒவ் வொரு வாய்ப்பையும் பயன்படு த்த வேண்டும் என்று ஜான் கால்வின் குறிப்பிடுகிறார்.
 "பவுல் அடிகளார் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவ ர்  தியத்திரா (வணிகத்தின் நிமித்தமாக மக்கெதோனியா பகுதியிலுள்ள பிலிப்பி (Philippi) நகரில் வசித்து வந்தார்).நகரைச் சேர்ந்த  செந்நிற ஆடை வியா பாரியான லீதியாவின் உள்ளத்தைத் திறந்தார்" என்ற வாக்கியத்திற்கு கால்வின் மிக முக்கியத்துவம் அளிக்கிறார். மனிதனின் இயல்பான அறிவா ல் இறைவார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது; தூய ஆவியா னவர் உள்ளத்தைத் திறந்தால் மட்டுமே நற்செய்தி உள்ளே செல்லும் என்பது அவரது மைய க் கருத்தாகும்.
 பவுலின் வார்த்தைகள் லிதியா வின் காதுகளில் விழுந்தாலும், இறைவனின் கிருபையே அந்த வார்த்தைகளை அவரது இதய த்தில் பதிய வைத்தது. வார்த்தை அறிவிக்கப்படுவதும், ஆவியானவர்உள்ளத்தில்செயல் படுவதும் இணைந்தே விசுவாச
த்தை உருவாக்குகின்றன. 
லீதியா ஏற்கெனவே 'கடவுளை வழிபடுபவராக' இருந்தபோதி லும், கிறிஸ்துவை அறிந்து கொள்ள இறைவனின் சிறப் பான கிருபை அவருக்குத் தேவைப்பட்டது.
லீதியா விசுவாசம் கொண்டவுட ன் அவரும் அவரது வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். குடும் பத் தலைவர்களின் விசுவாசம் அவர்களது முழு குடும்பத்திற் கும் இறைவனின் உடன்படிக்கை யின் ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது என்பதை கால்வின் இதன் மூலம் விளக்குகிறார்.
உண்மையான விசுவாசத்தின் அடையாளம் திருமுழுக்கு. திருமுழுக்குப் பெற்றவுடன் லிதியா பவுலையும் அவரது உடனுழைப்பாளர்களையும் தன் வீட்டில் வந்து தங்கும்படி வற்புறு த்தினார். உண்மையான விசுவா சம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், அன்பிலும் விருந்தோம்பலிலும் வெளிப்ப டும் என்பதை இது காட்டுகிறது.
தாழ்மையுடன் கூடிய வேண்டு கோள். "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால்" என்று லிதியா கூறியது, திருத்தூதர்க ளின் அங்கீகாரத்திற்கும் திருச் சபையின் ஐக்கியத்திற்கும் அவர் கொடுத்த மதிப்பைக் காட்டுவதாக கால்வின் விளக்குகிறார்.
யூதரல்லாத பிற இனத்தவராக இருந்தபோதிலும், லீதியா வேறொரு கடவுள் மீது ஆழமான பக்தி கொண்டவராக (God-fearer) இருந்தவர். இறை செய்தி கேட்டு மனம் மாறினார்.பிலிப்பி நகரில் அதாவது ஐரோப்பாவில் உரு வான முதல் கிறிஸ்தவத் திருச் சபை (House Church) லீதியாவின் வீட்டில்தான் கூடியது. 
3.பெண் குழந்தைகளுக்கான கிறித்துவின் அருட்பணி. Christ's Ministry for Girls. மாற்கு 5:21-43 
அன்பர்களே! மாற்கு 5:21-43
பகுதியின் பின்னணி, அக்கால த்து யூத சமுதாயத்தின் சமூக, சமய மற்றும் கலாச்சார நிலை மைகளைப் பிரதிபலிக்கிறது. ஒரே கதைக்குள் பின்னப்பட்டு ள்ள (Markan Sandwich) இந்த இரண்டு அற்புதங்களும், சமூக த்தின் இருவேறு துருவங்களில் இருந்தவர்களை இயேசு எவ் வாறு ஒரே விதமாக நேசித்தார் என்பதைக் காட்டுகின்றன.
1. வரலாற்று மற்றும் புவியியல் பின்னணி.
கப்பர்நகூம் கடற்கரை: இயேசு கதரேனர் நாட்டிலிருந்து (புற இனத்தார் பகுதி) படகில் ஏறி, மீண்டும் கலிலேயாக் கடலின் மேற்குக் கரையில் இருந்த கப்பர்நகூம் பகுதிக்குத் திரும் பி வந்தபோது இந்நிகழ்வு நடந்தது.
• பெருந்திரளான கூட்டம்: இயேசுவின் போதனைகளையும் அற்புதங்களையும் காண எப் போதும் அவரைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
2. யவீருவின் சமூகப் பின்னணி (உயர் அந்தஸ்து)
• தொழுகைக் கூட தலைவன் யவீரு அக்கால யூத சமுதாயத் தில் மிகுந்த செல்வாக்கும், மரியாதையும், செல்வமும் கொண்ட ஒரு முக்கியப் புள்ளி. ஆலயத்தின் (Synagogue) ஆராத னைகளை ஒழுங்குபடுத்துவதும், வேதவாசிப்பாளர்களை நியமி ப்பதும் இவரது பொறுப்பாகும்.
பெண் குழந்தையின் மதிப்பு: அக்கால ஆணாதிக்க சமுதா யத்தில் ஆண் வாரிசுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டாலும், 12 வயதுடைய தன் ஒரே மகள் மீது யவீரு கொண் டிருந்த ஆழமான பாசம், தன் பதவியையும் மறந்து இயேசு வின் காலில் விழ வைத்தது.
3. பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பின்னணி (சமூகப் புறக்கணி ப்பு)
அன்பர்களே! லேவியர் சட்டம் (தீட்டு): பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின்படி (லேவியராகமம் 15:25-27), தொடர்ச்சியாக இரத் தப்போக்கு உள்ள ஒரு பெண் 'தீட்டுள்ளவளாக' கருதப்பட்டாள். அவள் தொடுகிற எதுவும் தீட்டு ப்படும் என்பதால், அவள் குடும் பத்திலிருந்தும், ஆலய வழிபாட் டிலிருந்தும், சமூகத்திலிருந்தும் 12 ஆண்டுகளாகத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாள். அக்காலத்து மருத்துவ முறைகளால் குண மடைய முடியாமல், தன்னிடமி ருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்து வறுமை நிலைக் குத் தள்ளப்பட்டிருந்தாள். கூட்டத்திற்குள் வந்து இயேசு வைத் தொடுவது யூதச் சட்டப் படி குற்றமாகக் கருதப்பட்ட தால், அவள் யாருக்கும் தெரி யாமல் பின்னால் வந்து தொட் டாள்.
4. "12" என்ற எண்ணின் இறையியல் பின்னணி:
மாற்கு நற்செய்தியாளர் இந்த இரண்டு பெண்களையும் 12 என்ற எண்ணின் மூலம் இணைக்கிறார்:
யவீருவின் மகளுக்கு 12 வயது (அதாவது அவள் வாழத் தொட ங்கிய 12 ஆண்டுகள்).
• பெரும்பாடுள்ள ஸ்திரீ: அவள் 12 ஆண்டுகளாக நோயினால் துன்பப்பட்டாள் (அதாவது அவள் வாழ்வை இழந்து தவித்த 12 ஆண்டுகள்).
• இஸ்ரவேலின் 12 கோத்திரங் கள்: விவிலியத்தில் 12 என்பது இஸ்ரவேல் மக்களின் முழுமை யைக் குறிக்கும் எண். சமுதாயத்தின் உயர்மட்டத்தி லிருந்த யவீருவுக்கும், ஒடுக்கப் பட்ட நிலையிலிருந்த அப்பெண் ணுக்கும் இயேசு ஒரே விதமா ன மீட்பை வழங்கினார் என்பதை இது உணர்த்துகிறது.
இயேசு ஏன் மகளே என்று அழைத்தார்,? Why did Jesus call 'daughter',
அன்பர்களே!"மகளே" என்று அழைப்பதின் முக்கியத்துவம்
சமுதாயத்தால் "தீட்டுள்ளவள்" என்று ஒதுக்கப்பட்ட அந்தப் பெண்ணை இயேசு "மகளே" என்று அழைத்தார். முழு புதிய ஏற்பாட்டிலும் இயேசு ஒரு பெண்ணை "மகளே" என்று அழைப்பது இந்த ஒரே இடத்தில் மட்டும்தான். இதன் மூலம் அவளுக்கு இழந்த குடும்ப உற வையும், சமூக மரியாதையை யும் இயேசு மீட்டுக் கொடுத்தார்.
மாற்கு 5:21-43
பகுதியை விசுவாசத்தின் தன்மை மற்றும் கிறிஸ்துவின் தெய்வீக வல்லமையின் வெளிப்பாடாக விளக்குகிறார். இறையியலாளர் கால்வின். யவீருவின் மகள் உயிர்த்தெழு ப்பப்பட்டதும், பெரும்பாடுள்ள ஸ்திரீ சுகமாக்கப்பட்டதும் ஆகிய இரண்டு அற்புதங்களையும் கால்வின் ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறார்.
தொழுகைக் கூடத் தலைவர்க ளுள் ஒருவரான யாயிர்(யவீரு) என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து பணிந்தது, ஆபத்து காலங்களில் மனிதர்கள் தங்களின் உயர்ந்த பதவியையும் பெருமையையும்
விட்டுவிட்டுத் தாழ்மையுடன் கடவுளை நாட வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்று கால்வின் குறிப்பிடுகிறார்.
யவீரு இயேசு தன் வீட்டிற்கு வந்து தன் மகள் மேல் கைகளை வைக்க வேண்டும் என்று வற் புறுத்தினார். இயேசு தன் வார் த்தையினாலேயே எங்கிருந்தும் சுகமாக்க வல்லவர் என்பதை யவீரு முழுமையாக உணராமல், கைகளைத் தொடுவதன் மூலமே அற்புதம் நடக்கும் என்று நினை த்ததை கால்வின் "விசுவாசத் தோடு கலந்த ஒரு சிறிய பலவீ னம்" என்கிறார்.ஆனாலும், கிறிஸ்து அந்தப் பலவீனத்தைக் குறை கூறாமல் அவனது விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு அவனோடு சென்றார்.
அப்போது பன்னிரு ஆண்டுக ளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். 
கிறிஸ்துவின் வல்லமை அவரு டைய ஆடையில் தங்கியிருப் பதாக அவள் நினைத்தது சற்று மூடநம்பிக்கை போலத் தோன் றினாலும், அவளுடைய உண் மையான விசுவாசத்தைக் கிறிஸ்து மதித்து அவளைச் சுகமாக்கினார் என்று கால்வின் விளக்குகிறார்.
கிறிஸ்து தன் மேலுடையைத் தொட்டது யார் என்று கேட்டது, தனக்குத் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக அல்ல. மாறாக, அப்பெண் தன் விசுவாசத்தை எல்லோருக்கும் முன்பாக அறிக்கையிடவும், மற்றவர்கள் அவளது விசுவாசத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவுமே இயேசு அவ்வாறு கேட்டார்.
 "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று இயேசு கூறியதன் மூலம், ஆடையை தொட்ட செயலால் அல்ல, அவள் கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தினாலேயே அந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதைக் கால்வின் உறுதிப்படுத்துகிறார்.
இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். 
மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தபோது, யவீருவின் விசுவாசம் தளர்ந்து போகாமல் இருக்க அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலை வரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கை யை மட்டும் விடாதீர்" என்று கூறினார். மனித நம்பிக்கைகள் முற்றிலும் அற்றுப்போகும் இடத்தில்தான் கடவுளுடைய வல்லமை முழுமையாக விளங்கு கிறது என்பது கால்வினின் முக்கியக்கருத்தாகும்.
இறந்த பெண்ணை இயேசு "நித்திரையாயிருக்கிறாள்" என்று கூறியது, மரணம் என்பது கிறிஸ்துவின் வல்லமைக்கு முன்பாக ஒரு சாதாரணத் தூக்க த்தைப் போன்றது 
அற்புதம் நடந்த பிறகு அதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு கட்டளையிட்டத ற்குக் கால்வின் இரண்டு காரணங்களைக் கூறுகிறார். முதலாவது, கிறிஸ்து வீண் புகழை விரும்பவில்லை. இரண்டாவது, அப்பகுதி மக்கள் அந்த அற்புதத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு கலகம் விளை விக்கக் கூடாது என்பதற்காக வும், தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்கவுமே அவர் அவ் வாறு கட்டளையிட்டார்.
இறுதியாக, 
பெண் குழந்தைகளின் எதிர்
காலம் சிறப்பாக அமைய சிறந்த
கல்வி முறையும், கிறித்துவ ஒழுக்கமும், சமுதாய நோக்கில்
ஆண் பெண் என்ற பாகுபாட்டை
கலைந்து, குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து அனீதும் நீக்கி; அறிவுசால் சான்றோராய் உருவாக்குவதே சாலச் சிறந்தது.
பெண் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, வானில் பறப்பதற்கான கல்வி எனும் சிறகுகளைக் கொடுப்போம்."கடவுள் அவர்க ளின் வாழ்வோடு இருப்பாராக.
 



Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
 
Note: This Sermon has been prepared to deliver at CSI St.Peter's Church,Pazhaveli, Chengalpet on 15/11/2026








































































Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80