Posts

உண்மையும் நற்சொல்லும். (119)Truth and Honesty in Words. மத்தேயு: 5:33:37.

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பின் தீவிர பற்றுறுதியாளர் களே! தென்னிந்திய திருச்சபை இந்த லெந்து காலத்திற்கான சிறப்பான தலைப்புகளை தேர்வு செய்து  மானிடவியல் நல் நெறியு டன் வாழ நமக்கு வழிகாட்டி வருகிறது. இதன் அடிப்படையில் அமைந்த தலைப்புதான் " உண்மையும் நற்சொல்லும் ."  Truth and Honesty in Words.  சத்தியம்" என்பதற்கான கிரேக்க வார்த்தை அல்லேதேயா ஆகும், இது "மறைக்காதது" அல்லது "எதையும் மறைக்காதது" என்று எழுத்தியல்படி பொருள்படும். சத்தியம்" என்பதற்கான எபிரேய வார்த்தை எமெத் , அதாவது "உறுதி," "நிலை" மற்றும் "காலம்" ஆகும். சத்தியத்தின் மறு பெயர் "வாய்மை." திருவள்ளுவர் (குறள் 291:) "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்."என்கிறார். அதாவது;வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லு தல் ஆகும். ஒருவரின் மனதை துன்பபடுத்தாத செயலை கூறுகிறார்.  உண்மையும் நேர்மையும் மகாத்மா காந்தியால் போதிக்கப்படும் அடிப்படை மதிப்புகள் . "சத்தியமே கடவுள்" ...

இறைவேண்டலில் விடாமுயற்சி.(118) Persistence in Prayer. 2 அரசர் கள் 20:1-11. திருப்பாடல்: 116. 1 தெசலோனிக்கேயர் 5:12-22. மாற்கு: 7:24-30.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இறைவேண்டல் என்பது கடவுளி டம் பேசும் மொழியாகும். இறை வேண்டுதல் செய்யாமல் இறைவனிடம் செல்ல முடியாது. இறைவனிடம் கேட்டு பெரும் ஒரு வழியே இறை வேண்டல். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற வார்த்தை இறைவேண்டல் மூலமாகவே செயல்படுகிறது. இறைவேண்டுதளுக்கான தகுதியான நேரம் அது காலை நேரம். காலை நேரமே கர்த்தரின் மகிமையை காணும் நேரம். திருப்பாடல்(சங்கீதம்)5:3ல்,"ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறை யில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.  தாவீது அதிகாலையில் எழுந்த வர்; தான் மாத்திரமல்லாது தனது உதடுகளும் இசைக்கருவிகளும் அதைப் போன்று துதிகளைப் பாடவும் தீர்மானித்திருந்தார். ஆதலால் அவர் “வீணையே, சுர மண்டலமே, விழியுங்கள்” என்று அழைக்கிறார். "வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன்."  திருப்பாடல்(சங்கீதங்கள்) 108:2. இறை வேண்டல் முதலில் துதித்தலுடன் ஆரம்பிக்க வேண் டும், துதிகளுக்குள் வாசமாயிரு க்கிற தேவரீரே பரிசுத்தர். (திரு ப்பாடல்:22:3)என துதியுங்கள். உதடுகளின் கனியாகிய ஸ்தோத் திரப் பலிகளை செலுத்துங...

மண வாழ்வும் மன நிறைவும். Family Life as Fulfilling Life. (117) மத்தேயு: 5: 31,32.

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பு நண்பர்களே! இந்த லெந்து காலத்தில் மண வாழ்வும் மன நிறைவும். என்ற தலைப்பை சிந்திப்போம்.மண வாழ்வு புது வாழ்வாகும். இது மகிழ்ச்சியின் அடிப்படையில் அமைய வேண் டும்.மணவாழ்வில் பிரச்சினைகள் இன்று நேற்று அல்ல, மனித சரித்திரம் ஆரம்பமான காலத் திலிருந்தே உள்ளன. நம் முதல் பெற்றோரிடத்தில் (ஆதாம், ஏவாள்) தலைதூக்கிய குணங்க ளும் மனப்பான்மைகளுமே இன்று மணவாழ்வில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். ஆதாம் ஏவாள் தங்கள் தன்னல ஆசைகளுக்கு அடிபணிந் தபோது பாவம் எனும் படுகுழியில் விழுந்தார்கள், இப்படித்தான் ‘பாவம் உலகத்திலே பிரவேசித் தது.’ (ரோமர் 5:12) ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, ‘மனிதனின் இருதயத்து நினைவுகளின் அதாவது, சிந்தனைகளின் தோற் றமெல்லாம் நித்தமும் பொல்லாத தாகிவிட்டது’ என்று காட்டுகிறது.​(தொன்மைநூல்:⁠ஆதியாகமம் 6:5.) திருமணம் என்பது கடவுளின் உடன்படிக்கையை பிரதிபலிக்கும் ஒரு தூய உடன்படிக்கை என்று வேதம்கற்பிக்கிறது.ஆண்டவராகிய இயேசு கிறித்துவும்; "இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத் ததை மனிதர் பிரிக்காதிருக் கட்டும். "என்றார்.  (மத்தேயு நற்செ...

உயிர் காக்கும் பற்றுறுதி.Life Saving Faith. (116). 2 அரசர் 4:1-7. திருப்பாடல் 72. திருத்தூதர் பணிகள் 5:12-16. லூக்கா 5: 17-26.

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பு  இறையியலாளர்களே! துன்புறும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக் கள்.உலகில் உயிர் காக்கும் மருந் துகள் இருப்பது போல, நம் உயிர் காக்கும் மாமருந்து பற்றறுதி யாகும்  (விசவாசம்). எப்படி எனில் வேதம் கூறுகிறது "தன் விசு வாசத்தினாலே ( பற்றுறுதி, நேர்மை) நீதிமான் பிழைப்பான். – (ஆபகூக் 2:4) என தீர்க்கர் கூறுகி றார்.  தூய பவுல் அடிகளார் இந்த வசனத்தை தன் மூன்று நிருபங்க ளில் குறிப்பிடுகிறார்.(ரோமர், கலாத்தியர், எபிரேயர்).ஏனேனில், விசுவாசம் என்ற பற்றுறுதி உயிர் காக்கும் மருந்தாகும்.பவுல் அடிகளாரும்நம்பிக்கையினாலன்றி (பற்று றுதி) எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும். (எபிரேயர் 11:6) என கூறுகிறார்.விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகி றோம்.நீதிமான் என்பவர், இயேசு கிறிஸ்துவின்சிலுவைமரணத்தால் நீதியாக்கப்பட்டவர்களே நீதி மான். திரு தூதர் யாக்கோபு கூறு கிறார் எனவே மனிதர் நம்பிக்கை யினால் மட்டுமல்ல, செயல்களி னாலும் (கிரியை)...

மேலான கிறித்தவ அழைப்பு: தன்னடக்கமும், நன்னெறி வாழ்வும்.(115) Self Control and Virtuous Life மத்தேயு: 5:27-30 .

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பு நண்பர்களே! இந்த லெந்துகால செய்தியாக " தன்னடக்கமும், நன்னெறி வாழ்வும்" என்ற  தலைப்பை சிந்த்ப்போம். தன்ன டக்கம் (Self Control) என்பது,"சினம், அச்சம், பதற்றம்,முதலியவற்றுக்கு ஆட்பட்ட நிலையிலும் உணர்ச்சி களைக் (Feelings) கட்டுப்படுத்தி அமைதியுடன் தோன்றும் ஆற்றல்; தன்னடக்கம்; or தற்கட்டுப்பாடு எனப்படும்.  வேதத்தில் முதல் விபச்சார செய்தி யோசுவா 2 ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படு கிறது. எரிகோவில் வசிக்கும் ஒரு கானானியப் பெண், ராகாப் ஒரு விபச்சாரி, யோசுவா கானானைக் கைப்பற்றுவதற்கு முன்,  இரண்டு ஆட்களைஒற்றர்களாகநிலத்தைக் காண அனுப்புகிறார். அவர்கள் தங்குவதற்கும், நாட்டைப் பற்றி அறியவும் ராகாபின் வீட்டிற்கு வருகிறார்கள். இரண்டு பேரைப் பற்றி கேள்விப்பட்ட எரிகோவின் அரசர்,  அவர்களைக் கைவிடும்படி ராகாப்பிடம் கோருகிறார். ஆனால் ராகாப் ஆட்சியாளரை எதிர்த்து இஸ்ரவேலர் களைக்காப்பாற்று கிறார்.  இதனால் இஸ்ரவேலரின் வம்சவரலாற்றில் இவள் பெயர் இடம் பெறுகிறது. (மத்தேயு 1:5). விபச்சாரம் (Adultry) வேதத்தில் கடவுளின் 7 வது கட்டளையான " விபசாரம் செ...

லெந்து : தீண்டத்தகாதவர்களை தொடுதல். Lent: Touching The "untouchable". (114) 2 அரசர்கள் 5:1-10, திருப்பாடல் 10:1-12. எபிரேயர் 13:8-17. மத்தேயு 8:1-14.

Image
முன்னுரை : கிறித்துவின் அன்பு நண்பர்களே! இறைமைந்தன் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில்வாழ்த்துக்கள்."தீண்டத்தகாதவர்களை தொடுதல்"( "Touch ing the Untouchables") என்ற தலைப்பில்சிந்திப்போம். யூதர்கள் ஆதிகாலம் முதற்கொண்டு தன்னை தனி இனமாக, மற்ற இனமக்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர். மற்ற இன மக் களிடம் உறவும் இல்லை ஒட்டும் இல்லை என்றகோட்பாடு ஏற்ற தாழ்வுகளை கொண்டு வந்தது. இது இயேசு கிறித்துவின் காலத் தில் உச்சத்தில் இருந்தது. யூதர்கள், கிரேக்கர்கள் என்றும் சமாரியன், கலிலேயன் என்ற பாகுபாடும் இருந்தன. தமிழகத்தில் ஏறக்குறைய 16% மக்கள் கிறிஸ்துவர்கள். அனை த்து திருச்சபைகளையும் சேர்த்து மிக பெரிய சாதியாக இருப்பது தலித் கிறிஸ்தவர்கள் தாம். (அதனையடுத்துள்ள பெரிய சாதி கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வன்னியர்கள் ஆவர். அதனையடுத்துள்ள பெரிய சாதி தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த நாடார்கள் ஆவர்). இதில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகம் தலித் கிறிஸ்துவ சமூகமே. கிறித்துவ திருச்சபைகளில் உள்ள உயர் பதவிகளிலும் சாதி தலை விரித்தாடுகிறது. இது சம்பந்த மாக சபைகளுக்குள் நடக்கும் பூசல்கள் குறித்...

மேலான கிறித்தவ அழைப்பு. (113)(Higher Christian Calling.) ஒழுக்கம், ஒப்புரவாகுதல். Discipline, Reconciliation. மத்தேயு 5:21-26. First Friday. 16-2-2024.

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பர்களே! உங்கள் அனைவருக் கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இயேசு கிறித்துவின் அமைதி உங்கள் அனைவருக்கும் உரித்தாகுக. லெந்து காலத்தின் முதல் வெள்ளியின் அருட் பொழிவு மத்தேயு நற்செய்தியின் 5,6,7 அத்தியாயங்களை கொண்ட மலைப் பொழிவாகும். ஆண்ட வரின் மலைப்பொழிவு என்பதுபழைய ஏற்பாட்டில் மோசே அவர்கள் சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளை களையும், நியாப் பிரமானங் களையும் கடவுளின் விரலால் கல் பலகைகளில் எழுதியதை பெற்றுக் கொண்டார்.இதற்காக சீனாய் மலையில்  மோசே 40 நாட்கள்  கர்த்தருடன் இருந்தார்.   நமது ஆண்டவரின் மலைப் பொழிவு கலிலேயக் கடலின் வட மேற்கு கரையில் உள்ள மவுண்ட்ஆஃப் பீடிட்யூட்ஸ்  மலையாகும். ( The Mount of Beatitudes) உலக மக்கள் அனைவ ருக்குமான அருட் பொழிவை தருகிறார். இது கி.பி 30ம் ஆண்டு. நமது தேச தந்தை மகாத்மா காந்திஅவர்களுக்கு பிடித்த பகுதி இந்த மலை பொழிவுதான்.இது மனிதநேயத்தின்அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் ஒழுக்க நெறி களை வலியுறுத்துகிறது. இங்கு விண்ணரசைப் பெற்றவர்கள் எட்டு  வகையான வாழ்வுடைய மக்களே என குறிப்பிடுகி...