Resurrection: Celebrating the Joy of Salvation.உயிர்த்தெழுதல்: மீட்பின் மகிழ்ச்சியை கொண்டாடுதல்.(133) விடு.பய.14:26-31. திரு.பாட.118:14-29. கொலோசையர்: 3:1-11. மத்தேயு: 28:1-10. Easter.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனைவருக்கும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இயேசு உயிர்த் தெழுந்தார் என்ற செய்தி வரலாற் று நிகழ்வாகும். இதுவே கிறிஸ் துவத்தில் மீட்பின் நற்செய்தியா கும். இதன் அடிப்படையில்தான் தூய பவுல் அடிகளார், " கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டி ருக்கிற நம்பிக்கையும் பொருள ற்றதாயிருக்கும். (1 கொரிந்தியர் 15:14) என்கிறார். எனவே உயிர்த்தெழுதல் நிகழ்வே தான் திருச்ச சபையின் தொடக்க மாகும்.ஆண்டவரின் உயிர்த் தெழுதலே கிறிஸ்தவர்களின் உயிர்மூச்சியாகவும்.அடித்தளமாகும். அன்பானவர்களே! ஆண்டவர் இயேசுவை சிலுவை யில் அறையப்பட்ட கி.பி 33-ம் ஆண்டில் இருந்து உயிர்த்தெழுந்த நாள் கொண்டாடப்பட்டு வருகி றது. எனினும் கி.பி.325-ல் ரோம பேரரசை ஆண்ட கான்ஸ்டான் டைன் மன்னர் காலத்தில் இருந்து தான் ஈஸ்டர் பண்டிகை பிரபலம் ஆனது. ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காகவேஅப்போது தனிச்சட்டமும் பிறப்பிக்கப்பட் டது. ‘ ஈஸ்டர் ’ (Easter) என்ற வார்த் தைக்கு ‘ வசந்த காலம்’ என்ற அர்த்தம் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை பூ...